Published:Updated:

உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு விழா: பிரணாப் இன்று சென்னை வருகை

Vikatan Correspondent
உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு  விழா:  பிரணாப் இன்று சென்னை வருகை
உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு விழா: பிரணாப் இன்று சென்னை வருகை
உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு  விழா:  பிரணாப் இன்று சென்னை வருகை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.இதற்காக அவர் விசேஷ விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார். பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி பதவி ஏற்றபிறகு முதல்முறையாக சென்னை வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழாவில் கவர்னர் ரோசய்யா, முதல்மைச்சர் ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

பிரணாப் பயண விவரம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் 1.45 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வருகிறார். விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தபிறகு,கவர்னர் மாளிகையான ராஜ் பவனுக்கு மதியம் 2.15 மணிக்கு வருகிறார்.

கவர்னர் மாளிகையில் நடைபெறும் மதிய விருந்தில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பின்னர் அங்கேயே சற்று ஓய்வெடுக்கிறார்.அதன்பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருகிறார். அங்கு 150-வது ஆண்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணை அவர் திறந்து வைக்கிறார்.

##~~##
பின்னர், அங்கிருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஐகோர்ட்டு 150-வது ஆண்டு விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். மாலை 6.15 மணிக்கு விழா நிறைவடைகிறது.
அதன்பின்னர், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்கிறார். பின்னர், இரவு 7.30 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னையில் இருந்து திருப்பதி புறப்பட்டு செல்கிறார்.
அங்கு ஓட்டலில் தங்கும் அவர், நாளை  காலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதன்பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

150-வது ஆண்டு விழா
உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு  விழா:  பிரணாப் இன்று சென்னை வருகை
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு விழா தொடங்குகிறது.
காலை 10.05 மணிக்கு கருத்துப் பாடல் இசைக்கப்படுகிறது. குத்து விளக்கு ஏற்றப்பட்ட பிறகு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி சி.நாகப்பன் தலைமை உரை நிகழ்த்துகிறார்.பின்னர் `சென்னை ஐகோர்ட்டின் பெருமைகள்' என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் பேசுகிறார்.
 நிறைவு விழாவின் மாலை நிகழ்ச்சிகள் 5 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்குகின்றன. கவர்னர் ரோசய்யாவின் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது.
கடவுள் வாழ்த்து பாடப்பட்ட பிறகு சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் வரவேற்புரை ஆற்றுகிறார். அவர் 7 நிமிடங்கள் உரையாற்றிய பிறகு முக்கிய விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

ஜெயலலிதா அடிக்கல் நாட்டுகிறார்
பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர், விழா மலரை வெளியிட்டு 5 நிமிடங்கள் உரையாற்றுகிறார். அவரைத்தொடர்ந்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து முதல்மைச்சர் ஜெயலலிதா 150-வது ஆண்டு நினைவு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுகிறார். அவர் 5.49 மணி முதல் 5.55 மணி வரை 6 நிமிடங்கள் உரையாற்றுகிறார். அவரைத்தொடர்ந்து 5.55 மணி முதல் 6 மணி வரை தமிழக கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்துவார்.
பிரணாப் நிறைவுரை
அதன்பின்னர் மாலை 6 மணி முதல் 6.10 வரை தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிறைவுரை ஆற்றுவார். நிகழ்ச்சியின் முடிவில் நீதிபதி தர்மாராவ் நன்றி கூறுவார். 6.13 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.