Published:Updated:

சென்னையில் கன மழை!

Vikatan Correspondent
சென்னையில் கன மழை!
சென்னையில் கன மழை!
சென்னையில் கன மழை!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து  விடிய விடிய பெய்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது  மாலை மற்றும் இரவு நேரங்களில்  மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று பகல் பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்,  இரவு 12 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. லேசாக பெய்ய ஆரம்பித்த மழை,  பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்தது. எழும்பூர், சேத்துபட்டு, வேப்பேரி,  நுங்கம்பாக்கம், அசோக்நகர், வடபழனி, கோடம்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம் உள்பட  பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

##~~##
அதேப்போன்று திருவள்ளூர்,கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகரிலும் இடி, மின்னலுடன்  கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான   இடங்களில் மழை நீர்  தேங்கியது. இதனால், வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த  சிரமப்பட்டனர்.