Published:Updated:

4 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்ய பரிந்துரை!

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆராய  அமைக்கப்பட்டுள்ள குழு, 4 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமத்தை  ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதில், உரிமம் பெற்றும், குறித்த காலத்துக்குள் பணியைத் துவங்காத 3  நிறுவனங்களும், உரிமம் பெற அளிக்க வேண்டிய வங்கி உத்தரவாதத் தொகையை  அளிக்காமல் உள்ள ஒரு நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.