Published:Updated:

தீபாவளி சமயம் ஆம்னி பேருந்துகளின் வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா? ஓர் உண்மைக் கணக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீபாவளி சமயம்  ஆம்னி பேருந்துகளின் வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா? ஓர் உண்மைக் கணக்கு!
தீபாவளி சமயம் ஆம்னி பேருந்துகளின் வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா? ஓர் உண்மைக் கணக்கு!

தீபாவளி சமயம் ஆம்னி பேருந்துகளின் வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா? ஓர் உண்மைக் கணக்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீபாவளிக்கு ஊருக்குப் போவதற்காக அடித்துப் பிடித்து டிக்கெட் போட்டு ஊருக்குப் போன பலரிடமும் பேசிப்பாருங்கள்... பட்டாசுக்கும் மேலாக வயிறு பொசுங்குவதை உணர முடியும்.

''ஆமாம் பாஸ்... எதுலயும் டிக்கெட் கிடைக்கல... ரெண்டாயிரம் ரூபாய்க்கு ஆம்னி பஸ்லதான் டிக்கெட் கிடைச்சுது''

''ம்க்கும்... வால்வோ பஸ், ஏசி ஸ்லிப்பர்னு சொன்னானுங்க. அதனால 1500 ரூபாய் கொடுத்து புக் பண்ணினேன். கடைசியில பார்த்தா... பொன்னமராவதிக்கும், புதுக்கோட்டைக்கும் ஓடிட்டிருந்த ஏதோ ஒரு பாடாவதி பஸ்ஸைக் கொண்டுவந்து நிறுத்திட்டு, 'உங்களுக்காக ஏற்பாடாகியிருந்த வால்வோ பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சி. எப்படியும் அந்த பஸ்ஸு ரெடியாக ஆறு, ஏழு மணி நேரம் ஆகும். வேற வழியில்லாமத்தான் இந்த பஸ்ஸைக் கொண்டு வந்திருக்கோம். நீங்க சீக்கிரமா ஊருக்குப் போய் தீபாவளியைக் கொண்டாடணுமேங்கிற நல்லெண்ணத்துலதான் இந்த ஏற்பாடு' என்று கலர்கலராக ரீல் விடுவார்கள். எப்படியோ தீபாவளி விடிவதற்குள்ளாக ஊர்ப்போய்ச் சேர்ந்தால் போதுமென்று அந்த பாடாவதி பஸ்ஸிலேயே நீங்களும் புறப்பட்டுவிடுவீர்கள்.

இதுமாதிரியான நம்முடைய பலவீனங்கள்தான், இந்த ஆம்னி கொள்ளையர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. இத்தனைக்கும், ''ஆம்னி பஸ் கட்டணம் அளவுக்கு அதிகமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் துவங்கி, அதன் அமைச்சர் வரைக்கும் சீஸன் சமயத்தில் செமத்தையாக உறுமுவார்கள். அதன்பிறகு என்ன நடக்குமோ தெரியாது... கள்ளச்சாராயம் காய்ச்சும் பார்ட்டிகள் மீது பெயருக்கு கேஸ் போடுவதுபோல, ஒன்றிரண்டு பஸ்களின் மீது பெயருக்கு அபராதம் விதித்துவிட்டு கையைக் கட்டிக் கொண்டுவிடுவார்கள்!

இதைவிட பெரிய கொடுமை என்ன தெரியுமா? இந்த ஆம்னி பஸ்கள் இப்படி பயணிகளை ஏற்றிச் செல்வதற்குத் துளியும் தமிழகத்தில் அனுமதி இல்லை. ஆம், இந்த பஸ்களைப் பொறுத்தவரை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் மொத்தமாகத்தான் பயணிகளை அழைத்துச் செல்லவேண்டும். அதாவது, கல்யாணம், சுற்றுலா என்பதுபோன்ற காரணங்களுக்காக மொத்தமாக பஸ்ஸை குத்தகைக்கு பேசி எடுத்துச் செல்வோம் அல்லவா... சார்ட்டட் ட்ரிப், அப்படித்தான் செல்ல வேண்டும். இதற்காகத்தான் ஆம்னி பஸ்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு, 'கடலூர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம், நாகூர்... நாகூர்.. நாகூர்... நாகப்பட்டினம்' என்கிற ரேஞ்சுக்கு இஷ்டம்போல டிக்கெட் போட்டு, பயணிகளை ஏற்றுகின்றனர். சென்னை-விழுப்புரம்&திருச்சி&மதுரை; கோயம்புத்தூர்&சேலம்&கிருஷ்ணகிரி&சென்னை; தஞ்சாவூர்&கும்பகோணம்-&மயிலாடுதுறை-கடலூர்& புதுச்சேரி&சென்னை; நாகர்கோயில்&திருநெல்வேலி&விருதுநகர்&மதுரை&திருச்சி&சென்னை என்று மூலைமுடுக்கெல்லாம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் டிக்கெட் போட்டு பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்... கொள்ளையோ கொள்ளை கட்டணத்தைப் பறித்துக் கொண்டு! அதிலும் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, இரண்டாவது சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் சேர்ந்தாற்போல இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நாள்களுக்கு அரசு மற்றும் வார விடுமுறை போன்றவை அமைந்துவிட்டால், இவர்களின் காட்டில் மழைதான்.

இதோ... இவர்களின் கட்டணக் கொள்ளைக்கான ஆதாரங்கள். ஆம், ஆன்லைன் மூலமாக நடக்கும் இந்தப் பேருந்துகளின் டிக்கெட் புக்கிங்கில் பலவற்றை இங்கே ஸ்க்ரீன்ஷாட் எடுத்துள்ளோம். இவைதான் ஆதாரங்கள். இதை வைத்து இவர்களின் மீது போக்குவரத்துத்துறையும், அதன் அமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த ஆம்னி பஸ்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய பல்வேறு இணையதளங்கள் உள்ளன. இதில் ரெட் பஸ் இணையதளத்தை நம்முடைய கட்டுரைக்காக எடுத்துக் கொண்டோம். இந்த இணைய தளத்தின் மூலமாக சென்னை-மதுரை, சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு சாதாரண நாள்களில் கட்டணம் எவ்வளவு, விசேஷ நாள்களில் எவ்வளவு என்பது குறித்த பார்வை இதோ...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு