Published:Updated:

'நெறிமுறை கல்விப் பாடத்தை' இந்தியப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார் தலாய் லாமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'நெறிமுறை கல்விப் பாடத்தை'  இந்தியப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார் தலாய் லாமா
'நெறிமுறை கல்விப் பாடத்தை' இந்தியப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார் தலாய் லாமா

'நெறிமுறை கல்விப் பாடத்தை' இந்தியப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார் தலாய் லாமா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, இந்தியப் பள்ளிக்கான உலகளாவிய நெறிமுறை பாடத்திட்டத்தை (Universal Ethics Curriculum) அறிமுகப்படுத்தியிருக்கிறார். 

இந்த அறிமுக விழாவில் பேசிய தலாய் லாமா, "இன்றைய பள்ளிக் குழந்தைகளுக்கு 3000 ஆண்டு வரலாற்றுப் பின்னணி உணர்வையும், பாரம்பர்ய உணர்வையும் கலந்து வளர்க்க வேண்டும். இதன்மூலம், உணர்வுடன்கூடிய ஆரோக்கியமான மனநிலையை ஏற்படுத்த முடியும்.  ஏழு பில்லியன் மக்களிடையே அமைதி எண்ணத்தைப் போதிக்க வேண்டும். மத நம்பிக்கை வைத்தால், உலகளாவிய கல்வியாக மாறாது. இப்போதுள்ள கல்வியில், மத நம்பிக்கையைத் தொலைவில் வைத்துவிட்டு, பொது அனுபவங்களையும் பொது அறிவு மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 

தற்போதுள்ள மாணவர்கள், அறிவியலைப் பயன்படுத்திக்கொள்ள உள்ளார்ந்த மதிப்பை மேம்படுத்திக்கொள்ளவும், பார்வையை விசாலப்படுத்திக்கொள்ளவும் வேண்டும். இதன்மூலம் நல்ல இணைப்பையும் கருணையையும், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபடவும் முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

உலகளாவிய நெறிமுறை பாடத்திட்டத்தை, மீரட்டைச் சார்ந்த டி.ஏ.வி பொதுப் பள்ளியின் ஆசிரியர் ஆயுர் கியான் நியாஸ், ஆரம்பப் பள்ளி, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் தயாரித்திருக்கிறார். "எந்தவொரு மத நம்பிக்கையையும் தொடாமல், மதச்சார்பற்ற நெறிமுறை பாடத்திட்டத்தைத் தயாரித்திருப்பது சிறப்பு" என்று நியாஸைப் பாராட்டி இருக்கிறார் தலாய் லாமா .

உலகளாவிய நெறிமுறை பாடத்தை, வடமாநிலங்களில் உள்ள ஒன்பது பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அமல்படுத்த இருக்கிறார்கள்.  மாணவர்களிடையே அமைதி சிந்தாந்தம் வளர்ந்தால் சிறப்பே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு