Election bannerElection banner
Published:Updated:

சீன எல்லையில் காவல் காக்கும் பணியில் பிரபலத்தின் சகோதரர்!

சீன எல்லையில் காவல் காக்கும் பணியில் பிரபலத்தின் சகோதரர்!
சீன எல்லையில் காவல் காக்கும் பணியில் பிரபலத்தின் சகோதரர்!

சீன எல்லையில் காவல் காக்கும் பணியில் பிரபலத்தின் சகோதரர்!

வீட்டில் இருந்து ஒருவர் கவுன்சிலர் ஆனாலே... உறவினர்கள் ஆடுவார்கள். உ.பி முதல்வர் ஆதித்யநாத்தின் சகோதரர், ராணுவத்தின் கடைநிலை ரேங்கில் சீன எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டுவருகிறார்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 4 சகோதரர்களும் 3 சகோதரிகளும் உண்டு. அதில், இளைய சகோதரர் சைலேந்திர மோகன், இந்திய ராணுவத்தில் சுபைதராகப் பணிபுரிந்துவருகிறார் உத்தரகாண்ட்டின் புகழ்பெற்ற கத்ஃபால் ரிஃபைல்ஸ் ரெஜிமென்டில் பணிபுரியும் அவர், மானா பகுதியில் சீன எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச முதல்வராக ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு, ஒரே ஒரு முறைதான் சைலேந்திர மோகன் தன் சகோதரரை டெல்லியில் சந்தித்துள்ளார். 

ஆதித்யநாத் குறித்து சைலேந்திரா கூறுகையில், ''சிறுவயதில் அண்ணனுடன் நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன். இப்போதெல்லாம் அவரை சந்திப்பதே கடினம். நான் எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறேன். நாட்டில் அவர் மக்கள் நலனுக்காகப் பாடுபடுகிறார். நான் அவரைச் சந்தித்தபோது, உன்னால் முடிந்தவரை தேச நலனுக்காகப் பாடுபட வேண்டுமென்று வேண்டினேன்'' என்கிறார். 

ஆதித்யநாத் வீட்டுக்கு இரண்டாவது பிள்ளை. மூத்தவர், மன்வேந்த்ரா மோகன், ஆதித்யநாத்துக்குப் பிறகு, சைலேந்திர மோகன் மற்றும் மகேந்திர மோகன். 

பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என யோகி குறித்து பேச்சு அடிபட்டுவரும் வேளையில், அவரின் சகோதரர் ராணுவத்தின் சாதாரணமாகப் பணியாற்றிவருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

நன்றி : India Today

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு