Election bannerElection banner
Published:Updated:

மாணிக்சந்த் நிறுவனத் தலைவர் புற்றுநோயால் காலமானார்!

மாணிக்சந்த் நிறுவனத் தலைவர் புற்றுநோயால் காலமானார்!
மாணிக்சந்த் நிறுவனத் தலைவர் புற்றுநோயால் காலமானார்!

மாணிக்சந்த் நிறுவனத் தலைவர் புற்றுநோயால் காலமானார்!

புகையிலை பொருள்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள மாணிக்சந்த் குரூப் நிறுவனத்தின் தலைவர் ராசிக்லால் தாரிவால் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

Photo Cedit: RMD Foundation


உமிழ்நீர் சுரப்பி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ராசிக்லாலுக்கு, நிமோனியா காய்ச்சலும் ஏற்படவே, அவர் புனேவில் உள்ள ரூபிஹால் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். புற்றுநோய் பாதிப்பு மற்றும் நிமோனியா காய்ச்சல் பாதிப்புகளால் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பீடி தொழிலில் இருந்த மாணிக்சந்த் நிறுவனத்தின் கவனத்தை குட்கா (மெல்லும்வகையிலான புகையிலைத் தயாரிப்புகள்) பக்கம் ராசிக்லால் தாரிவால் திருப்பினார். இந்தியாவில் குட்கா போன்ற மெல்லும் வகையிலான புகையிலைத் தயாரிப்புகளின் உற்பத்தியை முதலில் தொடங்கியது மாணிக்சந்த் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலருக்கும் நெருக்கமானவராக அறியப்பட்ட ராசிக்லால் தாரிவால், பல்வேறு கல்வி நிறுவனங்களையும், அறக்கட்டளைகளையும் நடத்திவந்தார்.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு