Published:Updated:

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் ராஜினாமா!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர்  பதவியிலிருந்து ஜெயக்குமார் ராஜினாமா!
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் ராஜினாமா!
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர்  பதவியிலிருந்து ஜெயக்குமார் ராஜினாமா!

சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

துணை சபாநாயகர் தனபால், சபாநாயகர் பொறுப்பை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜினாமா ஏன்?

சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள அண்ணா வளைவு சர்ச்சை தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில்  மேயர் சைதை துரைசாமிக்கும் , ஜெயக்குமார் ஆதரவாளரான சந்தானத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் எதிரொலியாக வடசென்னை பகுதியை சேர்ந்த 12 அதிமுகவினர் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

தமது ஆதரவாளர்கள் மீது அதிமுக மேலிடம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாகவும், மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் சந்தானம் மோதலில் ஈடுபட்டதற்கு, ஜெயக்குமாரின் தூண்டுதலே காரணம் என அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டதாலுமே அவர் இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.