Published:Updated:

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் வரைவுப் பட்டியல் இன்று அந்தந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சிகளில் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் உள்ள தங்களது விவரங்களைப் பார்த்து அதில் திருத்தம் செய்யவும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், பெயரை சேர்க்கவும், பட்டியலில் உள்ள பெயரை நீக்கவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு வசதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வரும் ஒரு வாரத்துக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அவர்கள் வாழும் மாநகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பங்களைப் பெற்று வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் இன்று  வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"சென்னை  மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று  வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை 34  லட்சத்து 27 ஆயிரத்து 473. இதில் ஆண்கள் 17 லட்சத்து 17 ஆயிரத்து 979.  பெண்கள் 17 லட்சத்து 9 ஆயிரத்து 3. திருநங்கைகள் 491 பேர்.

கடந்த ஆண்டு புதியதாக 28,129 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த வரைவு வாக்காளர்  பட்டியல் மாநகராட்சி அனைத்து மண்டலங்களிலும் பொது மக்கள் பார்வைக்காக  வைக்கப்படுகிறது.

##~~##
பட்டியலில் பெயர் சேர்த்தல்,திருத்தம் செய்தல் போன்றவற்றிற்கு அதற்குரிய விண்ணப்ப  படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற  பணிகள் அக்டோபர் 31-ம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
ஜனவரி 5-ம் தேதி இறுதி அட்டவணை பட்டியல் வெளியிடப்படும்.வருகிற ஞாயிறு  முதல் தொடர்ந்து 3 ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்  நடத்தப்படும். 18 வயது நிரம்பியவர்களை சேர்ப்பதற்கு கல்லூரியில் விண்ணப்ப  படிவங்கள் கொடுக்கப்படும். தெளிவான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை  99.64 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.இது 100 சதவீதமாக நடவடிக்கை எடுத்து  வருகிறோம். சென்னையில் அதிக வாக்காளர்கள் பெரம்பூரிலும், குறைவான  வாக்காளர்கள் உறையூரிலும் உள்ளனர்” என்றார்.