Published:Updated:

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2பேர் பலி!

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2பேர் பலி!
சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2பேர் பலி!
சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2பேர் பலி!

சென்னை: சென்னையில் 2 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2 பேர் பலியாகினர்.மேலும்  பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவையொட்டி சுங்குவார் லேன் என்ற சந்தில்   தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது.இது 50 ஆண்டு  பழமையான கட்டிடம் ஆகும்.

இதன் 2-வது மாடியில் தியாகராஜனும்,அவரது மனைவி மஞ்சுவும் வசித்து வந்தனர்.  கீழ் தளத்தில் அச்சகத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.மேலும் அதே கட்டிடத்தில் 7  வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 7.50 மணிக்கு இந்த 2 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து  விழுந்து தரைமட்டமானது.இதனால் அங்கு குடியிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்  கொண்டனர்.இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.குறுகிய சந்து  என்பதால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அவர்களால் மீட்க முடியவில்லை.

உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு தீயணைப்பு  படையினர் விரைந்து வந்தனர்.100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டு மீட்பு  பணி தீவிரமாக நடந்து வந்தது.காலை 10 மணி வரை இடிபாடுகளுக்குள் யார் யார்  சிக்கியுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

மீட்பு பணியின்போது இடிபாடுகளுக்குள் தியாகராஜன்,அவரது மனைவி மஞ்சு,  வாடகைக்கு குடியிருந்த பாரதி, அவரது மகன் பார்த்தசாரதி (23) ஆகியோர் சிக்கி  இருப்பது தெரியவந்தது.அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்தது.

இதில் மஞ்சு, பாரதி ஆகிய இருவரும் பலியானது உறுதி செய்யப்பட்டது.அவர்களது  உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது.தியாகராஜன் மற்றும் பார்த்தசாரதி  ஆகியோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

பாரதியின் கணவர் அமிர்தலிங்கம் காலையில் டீ குடிப்பதற்காக வெளியில் சென்று  விட்டார்.இதனால் அவர் உயிர் தப்பினார்.கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் 10-க்கும்  மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  எனவே கட்டிட இடிபாடுகளின் உள்ளே ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

போலீசாருடன் சேர்ந்து பொதுமக்களும்  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இச்சம்பவம் காரணமாக திருவல்லிக்கேணி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.