Election bannerElection banner
Published:Updated:

ராட்டினத்திலிருந்து விழுந்து இளம்பெண் பலி: பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள் கைது!

ராட்டினத்திலிருந்து விழுந்து இளம்பெண் பலி: பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள் கைது!
ராட்டினத்திலிருந்து விழுந்து இளம்பெண் பலி: பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள் கைது!

ராட்டினத்திலிருந்து விழுந்து இளம்பெண் பலி: பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள் கைது!

ராட்டினத்திலிருந்து விழுந்து இளம்பெண் பலி: பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள் கைது!

சென்னை:சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில்  ராட்டினத்திலிருந்து விழுந்து விமான பணிப்பெண் பலியானார்.இதுதொடர்பாக அப்பூங்கா  நிர்வாகி உள்ளிட்ட  3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்தவர் அபியாமேக் (25).தனியார் விமான நிறுவனத்தில்  விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம்,  கோத்தாரி நகரில், தன்னுடன் பணிபுரியும் தோழிகளோடு வாடகை வீட்டில் வசித்து  வந்தார்.

இந்நிலையில்,நேற்று காலை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள  'இ.வி.பி. வேர்ல்டு' என்ற தனியார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தனது தோழிகள்  மற்றும் நண்பர்கள் 12 பேருடன் சென்று, அங்குள்ள 'ஆக்டோபஸ்' ராட்டினத்தில்  அமர்ந்தார். இந்த ராட்டினம் மேலே வளைந்தும், தலைகீழாகவும் செல்லக்கூடியது.  இதில் சுமார் 20 பேர் பயணம் செய்வார்கள். பயணம் செய்பவர்கள் அனைவரும் சீட்டில்  அமர்ந்து பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும்.

இந்த ராட்டினத்தை ஆபரேட்டர் வில்லியம்ஸ் இயக்கினார் ராட்டினம் இயக்கப்பட்ட சிறிது  நேரத்தில், மேலே சென்ற அபியாமேக்,அலறியபடி கீழே விழுந்தார். இதில் அவர் சுய  நினைவை இழந்து மயங்கி விட்டார். இதைக் கண்டதும் ராட்டினத்தை இயக்கிய  ஆபரேட்டர் அங்கிருந்து ஓடி விட்டதாகவும், இதனால் ராட்டினம் வேகமாக வந்து  தரையில் விழுந்து கிடந்த அபியாமேக்கின் தலையில் மோதியதாகவும் கூறப்படுகிறது.

##~~##
இதனையடுத்து,அங்கிருந்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்து ராட்டினத்தை நிறுத்திவிட்டு  தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அபியாமேக்கை வேனில் ஏற்றிக்கொண்டு  தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராட்டினம் ஆபரேட்டர் வில்லியம்ஸ்,  நிர்வாகி அசோக், பொறியாளர் அராப் ஆகிய 3 பேரைகைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு