Published:Updated:

கின்னஸ் சாதனைக்காக 800 கிலோ கிச்சடி! - ராம்தேவ் கைப்பக்குவத்தில் தயார்

டில்லியில்  நடைபெற்று வரும் சர்வதேச உணவுத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் கின்னஸ் சாதனை முயற்சியாக 800 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டு வருகிறது.

கின்னஸ் சாதனைக்காக 800 கிலோ கிச்சடி! -  ராம்தேவ் கைப்பக்குவத்தில் தயார்

சமையல் கலைநிபுணர் சஞ்சீவ் கபூர் தலைமையில்  20-க்கும் மேற்பட்ட சமையல் கலை நிபுணர்கள் இதைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய கலன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விட்டம் 7 மீட்டர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, யோகா குரு பாபா ராம் தேவ் ஆகியோரும் கலந்துகொண்டு கிச்சடியைத் தயார் செய்தனர். கிச்சடியைத் தேசிய உணவாக அறிவிக்க மத்திய அரசுத் திட்டமிடுவதாகச் செய்திகள் வெளியான நிலையில், அப்படியான திட்டம் எதுவும் இல்லை என்று அது தொடர்பான விவாதத்துக்கு மத்திய அமைச்சர் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு