Published:Updated:

வாக்காளர் பட்டியல!: திருத்தம் கோரி விண்ணப்பிக்கலாம்

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள தேர்தல் கமிஷன், புதிதாக பெயர் சேர்க்க, இன்று முதல் ஒரு மாதம் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் '2013-ம் ஆண்டு ஜனவரி முதல் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்ய இன்று விண்ணபிக்கலாம்.

மேலும் புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து 18 வயது முழுமை அடைந்தவர்கள் புதிதாக பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களை காட்டி தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்து கொள்ளலாம் .

இவ்வாறு தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்படடுள்ளது.