Published:Updated:

’மகிழ்ச்சி!’: கமல் அரசியல் பிரவேசம் குறித்து அருண் ஜெட்லி

’மகிழ்ச்சி!’: கமல் அரசியல் பிரவேசம் குறித்து அருண் ஜெட்லி
’மகிழ்ச்சி!’: கமல் அரசியல் பிரவேசம் குறித்து அருண் ஜெட்லி

’மகிழ்ச்சி!’: கமல் அரசியல் பிரவேசம் குறித்து அருண் ஜெட்லி

’அரசியலுக்கு மேலும் ஒருவர் வருவது மகிழ்ச்சி’ என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாளான இன்று, புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலி பற்றி  விவரித்துப் பேசிய கமல், `இது வெறும் ஆப் மட்டுமல்ல; இது, பொது அரங்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறும்போது, “அரசியலில் ஈடுபடுவதற்காக முன்னேற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறேன். சில ஆரம்பக்கட்டப் பணிகளை மேற்கொண்டுவருவதால் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமாகிறது. ஜனவரி மாதத்துக்குப் பின் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும். எனது அரசியல் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும்” என்றார்.

இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி தமிழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது மரியாதை நிமித்தமாக மட்டுமே” என்றார். மேலும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, “அரசியலுக்கு மேலும் ஒருவர் வருவது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு