Published:Updated:

டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை தமிழக அரசு மறைக்கிறது! : கருணாநிதி

டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை தமிழக அரசு மறைக்கிறது!  : கருணாநிதி
டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை தமிழக அரசு மறைக்கிறது! : கருணாநிதி
டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை தமிழக அரசு மறைக்கிறது!  : கருணாநிதி

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை தமிழக அரசு மறைக்கப் பார்க்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி,திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்தான தீர்ப்பின் மூலம்,திமுகவினர் மீதான பழிவாங்கும் நடவடிக்கை இது என்பது தெளிவாகிறது என்றார்.

மேலும், "தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது. அமைச்சர்களும் அந்தப் பல்லவியையே பாடுகிறார்கள். டெங்கு காய்ச்சலால் யாரும் சாகவில்லை என்று நேற்று வரையிலே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது காய்ச்சல் தீவிரமாக பரவி, பல உயிர்களை மாய்த்திருக்கின்ற காரணத்தால் மத்திய சர்க்காருடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களே, தமிழகத்திற்கு வந்து அதில் அக்கறைக் காட்டிச் சென்றுள்ளார்.

தி.மு.க. ஆட்சியின்போது மின்வெட்டினைப் பற்றி ஒன்றிரண்டு செய்திகள் வரும்போதெல்லாம், தோள்தட்டிக் கோபமாகப் பேசிய அந்த அமைச்சர், அப்போது தி.மு.க. ஆட்சியை பலமாக கண்டித்த அந்த அமைச்சர்; இப்போது மின்சார குறைபாட்டுக்கு திரை போட்டுக் கொண்டிருக்கிறார் " என்றார் கருணாநிதி.