Published:Updated:

அக்டோபர் 18 ல் வடகிழக்கு பருவ மழை!

அக்டோபர் 18 ல் வடகிழக்கு பருவ மழை!
அக்டோபர் 18 ல் வடகிழக்கு பருவ மழை!
அக்டோபர் 18 ல் வடகிழக்கு பருவ மழை!

சென்னை: தென்மேற்கு பருவ மழை இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடைய  உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 18 அல்லது 19 ம் தேதி வாக்கில்  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை.இதன்  காரணமாக மேட்டூர் அணைக்கும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் கிடைக்கவில்லை.  இதனால் டெல்டா பாசன விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் தென்மேற்கு முடிவடைய உள்ள நிலையில்,வருகிற  அக்டோபர் அக்டோபர் 18 அல்லது 19 ம் தேதி வாக்கில் தமிழகத்தில் வடகிழக்கு  பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

##~~##
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு  நாட்களில் முடிவடைவதற்கான அறிகுறிகள் உள்ளன.வருகிற, 18 அல்லது 19 ம்   தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
முதல் கட்டமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்.பருவ மழை  தீவிரமடையும் போது மாநிலம் முழுவதும் மழை பெய்யும்.வருகிற டிசம்பர் வரை  வடகிழக்கு பருவமழை நீடிக்கும்.
லட்சத்தீவின் மேல் உள்ள மேகங்களின் மேற்பரப்பில் உள்ள நீர்த் திவலைகள் காரணமாக  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இன்னும் 24 மணி  நேரத்திற்கு இந்த மழை நீடிக்கும்” என்றார்.