Published:Updated:

ஆடி ஆர்8 காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வாசகர்களுக்கு வாய்ப்பு!

ஆடி ஆர்8 காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வாசகர்களுக்கு வாய்ப்பு!
ஆடி ஆர்8 காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வாசகர்களுக்கு வாய்ப்பு!
ஆடி ஆர்8 காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வாசகர்களுக்கு வாய்ப்பு!

சென்னை:ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ஆடி ஆர்8 காரை டெஸ்ட் டிரைவ்  செய்வதற்கு மோட்டார் விகடன் வாசகர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.

மோட்டார் விகடன் இன்று, ஆடி ஆர்8 காரை டெஸ்ட் டிரைவ் செய்தது.இந்நிலையில்  வாசகர்களும் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான வாய்ப்பை மோட்டார் விகடன்  பத்திரிகை வழங்க முன்வந்துள்ளது.

மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான  பதிலை,உடனடியாக கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.

சரியான விடை எழுதும் வாசகர்களில் தேர்ந்தெடுக்கப்படும் வாசகர் ஒருவருக்கு ஆடி ஆர்8  காரை வரும் 20 ம் தேதி சனிக்கிழமையன்று, சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ்  ட்ராக்கில் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு காத்திருக்கிறது.

வருகிர 19 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குள் அனுப்பப்படும் பதில்கள்  மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.