Published:Updated:

தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை மையம் அறிவிப்பு

விகடன் விமர்சனக்குழு
தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை:புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால்,அடுத்த 24 மணி  நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.  இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில  இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

##~~##
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.ஓரிரு இடங்களில்  மழை  பெய்யும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு, தொண்டி, மானாமதுரை  இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.