

சென்னை:தமிழ்நாடு சட்டசபை இன்று கூடிய நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன் சட்டமன்ற துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதனையடுத்து சட்டமன்ற துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ஏற்கனவே மனு தாக்கல் செய்த நிலையில், அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் ,பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடர் ஏறக்குறைய ஒருவாரம் நடைபெறும் என்று தெரிகிறது. இது குறித்து முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தனபால் தலைமையில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு இன்று கூடுகிறது.
4 தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கு தனி இருக்கை
இதனிடையே முதல்மைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்த தேமுதிகவைச்சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டமன்றத்தில்,ஒரே வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.