Published:Updated:

கரை கடந்த நீலம்: நிவாரண நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு!

கரை கடந்த நீலம்: நிவாரண நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு!
கரை கடந்த நீலம்: நிவாரண நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு!

சென்னை: பலத்த காற்றுடன் மாமல்லபுரத்தில் நீலம் புயல் கரையை கடந்தது. புயல் நிவாரண நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வங்கக்கடலில் உருவான நீலம் புயல் 70 கி.மீ வேகத்தில் மகாபலிபுரம் அருகே இன்று மாலை கரையை கடந்தது.

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து திங்கள்கிழமை புயல் சின்னமாக உருவெடுத்தது. சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த 'நீலம்' புயல்,  மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது.

கரை கடந்த நீலம்: நிவாரண நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு!

மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த புயல் விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டம் வழியாக சென்று வலுவிழக்கும். இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலம் புயல் காரணமாக 16 கடலோர மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. புயல் தாக்கம் குறைந்ததும் மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

புயல் நிவாரண நடவடிக்கைக்கு முதல் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் புயல் பாதித்தோருக்கான எமெர்ஜென்ஸி நம்பர்: (044) 26412646, 28170738, 24838968, 24867725, 24425961, 22420600, 24500923, 26253331