Published:Updated:

19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!
19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!
19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை:சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் பி.தாமரைக்கண்ணன் உள்ளிட்ட  19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபால் பிறப்பித்துள்ள  உத்தரவில்,"சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் பி.தாமரைக்கண்ணன்,  (புதிதாக உருவாக்கப்பட்டுள்ள) வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மேற்கு இணை கமிஷனர் கே.சங்கர், வடசென்னை இணை  கமிஷனராகவும்,பயிற்சிக்கு சென்று இருந்த இணை கமிஷனர் ஆர்.எஸ்.நல்லசிவம்,  சென்னை மாநகர போலீஸ் தலைமையக இணை கமிஷனராகவும், விழுப்புரம் சரக  டி.ஐ.ஜி. கே.சண்முகவேல், மேற்கு சென்னை சட்டம் ஒழுங்கு இணை  கமிஷனராகவும்,

வடசென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் என்.கே.செந்தாமரைகண்ணன்,  விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம்


காஞ்சீபுரம் சரகம் (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு) டி.ஐ.ஜி. ஆர்.திருஞானம்,  தென்சென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும், தென்சென்னை இணை  கமிஷனர் கே.பி.சண்முகராஜேஸ்வரன்,திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாகவும்,  சென்னை மாநகர போலீஸ் தலைமையக இணை கமிஷனர் கே.என்.சத்தியமூர்த்தி,  காஞ்சீபுரம் சரக (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு) டி.ஐ.ஜி.யாகவும், ரயில்வே  போலீஸ் டி.ஐ.ஜி. டாக்டர் ஆர்.தினகரன், தென்சென்னை போக்குவரத்து பிரிவு இணை  கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

##~~##
சென்னை தி.நகர் துணை கமிஷனர் ஆர்.சிவகுமார், சென்னை மத்திய குற்றப்பிரிவு  துணை கமிஷனராகவும், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.சரவணன்,  பரங்கிமலை துணை கமிஷனராகவும், பரங்கிமலை துணை கமிஷனர் ஏ.சரவணன்,  சென்னை மாநகர போலீஸ் நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராகவும், தஞ்சாவூர் மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு ஏ.கே.கிரி, திருவல்லிக்கேணி துணை கமிஷனராகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,  டி.ஜெயசந்திரன், மைலாப்பூர் துணை  கமிஷனராகவும், மைலாப்பூர் துணை கமிஷனர் டி.கே.புகழேந்தி கடலூர் மாவட்ட  போலீஸ் எஸ்.பி.யாகவும், கடலூர் மாவட்ட போலீஸ் எஸ். பி.பகலவன்,  தி.நகர் துணை கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்  ஏ.ராதிகா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ்  எஸ்.பி.யாகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பூக்கடை துணை கமிஷனர் டி.எஸ்.அன்பு, தஞ்சாவூர்  மாவட்ட போலீஸ்  எஸ்.பி.யாகவும், வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனர்  நிர்மல்குமார் ஜோஷி, பூக்கடை துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதவி

சென்னை மாநகர காவல் துறையில், இதுவரை ஒரு கூடுதல் கமிஷனர் பதவி மட்டுமே  இருந்தது. இப்போது அந்த பதவி தென்சென்னை, வடசென்னை என்று இரண்டாக  பிரிக்கப்பட்டு,ஏற்கனவே மாநகர கூடுதல் கமிஷனராக இருந்த பி.தாமரைக்கண்ணன்,  வடசென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, தென் சென்னை கூடுதல் கமிஷனராக,ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி  விரைவில் நியமிக்கப்படுவார் என்று சென்னை காவல்துறை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.