Published:Updated:

கல்பாக்கம் அணுமின் நிலையம் முற்றுகை!

கல்பாக்கம் அணுமின் நிலையம் முற்றுகை!
கல்பாக்கம் அணுமின் நிலையம் முற்றுகை!
கல்பாக்கம் அணுமின் நிலையம் முற்றுகை!

சென்னை: தொடர் மின்வெட்டை கண்டித்து கல்பாக்கம் அணுமின் நிலைய நுழைவு  வாசல் பகுதியை கிராம மக்கள் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம், மெய்யூர் கிராமங்களில் 16 மணி நேரம் மின்தடை  உள்ளது.இதனால்,பொதுமக்கள் வீட்டில் மிக்சி,கிரைண்டர்,வாஷிங்மெஷின் போன்ற  சாதனங்களை பயன்படுத்த முடியவில்லை.பிரிட்ஜ் செயல்படாததால் வியாபாரிகள்  பாதிக்கப்பட்டனர்.மாணவ, மாணவிகள் படிக்க முடியாமலும்,விவசாயிகள் மோட்டாரை  இயக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.

மின்வெட்டு நேரத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகம்,  மின்சார வாரியத்துக்கு பலமுறை கிராம கோரிக்கை விடுத்தனர்.எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படாததால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு மறியல்  செய்ய அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

இந்த தகவல் போலீசுக்கு தெரியவந்தது.இதையடுத்து, நேற்று மாலை காஞ்சிபுரம்  கலெக்டர் சித்திரசேனன், எஸ்.பி. மனோகரன், செங்கல்பட்டு ஆர்டிஓ செல்லப்பா,  மாமல்லபுரம் டிஎஸ்பி கணேசன், திருக்கழுகுன்றம் தாசில்தார் ஜகாங்கீர் ஆகியோர்  சதுரங்கப்பட்டினம், மெய்யூர் மக்களிடம் சமசர பேச்சுவார்த்தை நடத்தினர். ‘சாலை  மறியல் செய்து சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டாம்.

இன்னும் 10 நாளில் நிலைமை சீர்செய்யப்படும்’ என்று கலெக்டர் உறுதி அளித்தார்.  அதை கிராம மக்கள் ஏற்கவில்லை.அவர்கள் கூறுகையில், ‘‘கல்பாக்கம் அணுமின்  நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை எங்களுக்கு வழங்கலாம்’’ என்றனர்.

##~~##
இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய நுழைவு வாசல் அருகில் உள்ள  ரவுண்டானா பகுதியில் சதுரங்கபட்டினம், மெய்யூர் கிராமங்களை சேர்ந்த ஆண்கள்,  பெண்கள் என 250-க்கும் அதிகமானோர் இன்று காலை திரண்டனர். எல்லாரும் சாலை  மறியல் செய்ய முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.  ‘கலெக்டர் உறுதிமொழியை மீறி மறியல் செய்தால் கைது செய்வோம்’ என்று போலீசார்  எச்சரித்தனர். அதையும் மீறி மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.  அவர்களில் 10 பேரை போலீசார் பிடித்து பஸ்சில் ஏற்றினர். மற்றவர்கள் போலீசாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சதுரங்கபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,"கலெக்டர்  உறுதிமொழியை ஏற்று 10 நாள் காத்திருப்போம். அதற்குள் மின்வெட்டை சரி  செய்யவில்லை என்றால் மொத்த மக்களையும் திரட்டி பெரிய அளவில் போராட்டம்  நடத்துவோம்" என்றார். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.