Published:Updated:

பி.ஆர்.பி. நிறுவனத்தை நடத்த இடைக்காலத் தடை!

மதுரை: பி.ஆர்.பி. நிறுவனம் கிரனைட் குவாரி நடத்த 4 வாரம் இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பி.ஆர்.பி. குவாரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றியதை எதிர்த்து தமிழக அரசு மனு செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கே.என்.பாட்ஷா, தேவதாஸ் பிறப்பித்த உத்தரவில் பி.ஆர்.பி. நிறுவனம் கிரனைட் குவாரி நடத்த 4 வாரம் இடைக்காலத் தடை விதித்தும்; பி.ஆர்.பி. குவாரி பணியாளர்களுக்கு ஊதியம், தீபாவளி போனஸ் வழங்க அனுமதி வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

பி.ஆர்.பி. நிறுவனத்தை நடத்த இடைக்காலத் தடை!

முறைகேடுகள் குறித்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழக அரசு மனு மீதான விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்