Published:Updated:

மாற்றுத்திறனாளி மாணவர்களை பதறவைத்த டெல்லி அரசு! கடும் குளிரில் தெருவில் படுத்து உறங்கிய அவலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாற்றுத்திறனாளி மாணவர்களை பதறவைத்த டெல்லி அரசு!  கடும் குளிரில் தெருவில் படுத்து உறங்கிய அவலம்
மாற்றுத்திறனாளி மாணவர்களை பதறவைத்த டெல்லி அரசு! கடும் குளிரில் தெருவில் படுத்து உறங்கிய அவலம்

மாற்றுத்திறனாளி மாணவர்களை பதறவைத்த டெல்லி அரசு! கடும் குளிரில் தெருவில் படுத்து உறங்கிய அவலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லியில், பல ஆண்டுகளாக இயங்கிவந்த சிறப்பு விடுதி இடிக்கப்பட்டதால், அதில் தங்கியிருந்த பார்வைக்குறைபாடுள்ள மாணவர்கள், தெருவில் தூங்கிய  அவலம் நிகழ்ந்துள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களை பதறவைத்த டெல்லி அரசு!  கடும் குளிரில் தெருவில் படுத்து உறங்கிய அவலம்


 

டெல்லியில், ஜனக்புரி மாவட்டத்தில் உள்ள விரேந்தர்  நகரில், கடந்த 17 ஆண்டுகளாக பார்வைக் குறையுடைய மாணவர்களுக்கான விடுதி இயங்கிவந்துள்ளது. இவ்விடுதியில், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் சர்வோதயா பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்கள் தங்கிப் படித்துவந்தனர். இவ்விடுதியில், வார்டன் கமலேஷும் பார்வைக் குறைபாடுடையவர். கடந்த 15-ம் தேதி காலை 11 மணியளவில், திடீரென அப்பகுதிக்கு வந்த டெல்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், ’கட்டடத்தை இடிக்கப்போகிறோம்... வெளியே போங்க’ என்று மாணவர்களை வெளியேற்றியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி, போலீஸுடன் வந்த அதிகாரிகள் விரட்டியதால் அதிர்ச்சியில் உறைந்தார்கள். ’எங்களின் உடைமைகளை எடுத்துக்கொள்ளக்கூட நேரம் கொடுக்கவில்லை’ என்று குற்றம் சாட்டுகின்றனர் மாணவர்கள். 

மாற்றுத்திறனாளி மாணவர்களை பதறவைத்த டெல்லி அரசு!  கடும் குளிரில் தெருவில் படுத்து உறங்கிய அவலம்


Image Courtesy : Indian Express


இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிகைக்குப் பேட்டியளித்த அருண் என்னும் மாணவர், ‘நான் பள்ளிக்குச் சென்றுவிட்டு விடுதிக்குத் திரும்பியபோது, விடுதி தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. என் புத்தகங்கள், அட்மிஷம் ஸ்லிப் என எல்லாப் பொருள்களும் இடிபாடுகளில் புதைந்துவிட்டன’ என்று கண்ணீர்விட்டிருக்கிறார்.  

இந்தச் சம்பவம்குறித்து டெல்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘பார்வைக்குறையுடைய மாணவர்கள் ஏன் தனியார் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும்? அரசு விடுதிகள் இயங்கின்றனவே. இந்த விடுதி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இயங்குகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே விடுதி நிர்வாகத்துக்கு தகவல் அளித்தோம். ஆனால், நோட்டீஸ் ஏதும் அனுப்பவில்லை. அதை வைத்து, நீதிமன்றத்தில் கட்டடத்தை இடிக்க தடை ஆணையம் வாங்கிவிடுவார்கள். அதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையப் பணிகள் பாதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம்குறித்து அப்பகுதியின் கவுன்சிலர் கூறுகையில், ‘பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களால் நடத்தப்பட்ட விடுதி. அவர்கள் சம்பாதிக்கும் நோக்கத்தில் இவ்விடுதியை இயக்கவில்லை. டெல்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், கடும் பனிக்காலத்தில்  மாணவர்களைத் தெருவில் நிற்கவைத்துவிட்டார்களே...’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

தற்போது, 25 மாணவர்களும் தங்க இடம் கிடைக்காமல் சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வசித்துவருகிறார்கள். ’டெல்லியின் கடும் குளிரில் எங்களை தெருவில் நிற்கவைத்துவிட்டார்கள்’ என்று மாணவர்கள் கண்ணீர் மல்க ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளனர். 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு