Published:Updated:

சிறைக்குச் செல்கிறார் லாலு பிரசாத்..! குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் அறிவித்தது.

சிறைக்குச் செல்கிறார் லாலு பிரசாத்..! குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று தீர்ப்பை அறிவித்த நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ரா உள்ளிட்ட  7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு விவரம் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவ் இன்றே சிறைக்குச் செல்வார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு