Published:Updated:

ஆதர்ஷ் ஊழல் வழக்கு: அசோக் சவான் மீது விசாரணை இல்லை!

ஆதர்ஷ் ஊழல் வழக்கு: அசோக் சவான் மீது விசாரணை இல்லை!
ஆதர்ஷ் ஊழல் வழக்கு: அசோக் சவான் மீது விசாரணை இல்லை!

ஆதர்ஷ் ஊழல் வழக்கு: அசோக் சவான் மீது விசாரணை இல்லை!

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் மீதான விசாரணைக்கு ஆளுநர் அளித்த உத்தரவை ரத்து செய்வதாக மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல் அமைச்சர்கள் விலாஷ்ராவ் தேஷ்முக், அசோக் சவான், சுசில்குமார் ஷிண்டே ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக, இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி பாட்டீல் குழு தெரிவித்திருந்தது. ஆனால், பாட்டீல் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது என்று மகாராஷ்டிரா அமைச்சரவை, அறிக்கையை நிராகரித்தது. இதையடுத்து அசோக் சவானின் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அசோக் சவான் அரசு பிரதிநிதி என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதி தேவையானதாக இருந்தது. இதையடுத்து ஆளுநரின் அனுமதியையும் சிபிஐ பெற்றது. ஆனால், அசோக் சவான் மீது விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அளித்த அனுமதியை ரத்து செய்வதாக மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு