Published:Updated:

ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம்: அன்னா ஹசாரே அறிவிப்பு
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம்: அன்னா ஹசாரே அறிவிப்பு
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

புதுடெல்லி: ஊழலுக்கு எதிராக வருகிற ஜனவரி 30 ம் தேதி முதல் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

டெல்லியில் தமது குழு உறுப்பினர்களுடன் சுமார் 5 மணி நேரம் ஆலோசித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து வரும் ஜனவரி 30ம் தேதி பிரசாரத்தை தொடங்கப் போவதாக அவர் கூறினார்.

கிரண் பேடி, மேத்தா பட்கர், சந்தோஷ் ஹெக்டே உள்பட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்த அவர், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 55 உறுப்பினர்களைக் கொண்டதாக இக்குழு விரிவுபடுத்தப்படும் என்றார். ஊழலுக்கு எதிராக நாடு ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட ஹசாரே, ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 50 பேரை ஊழலுக்கு எதிராக பிரச்சாரத்திற்கு தயார்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

##~~##
ஜன் லோக்பால், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை மக்களே திரும்பப் பெறும் உரிமை, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை தன்னிச்சையான அமைப்புகளாக மாற்றுதல் போன்றவை தமது உறுதியான நோக்கம் என்றார் அன்னா ஹசாரே. மேலும், ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.