Published:Updated:

தரை தட்டி நின்ற கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது!

Vikatan Correspondent
தரை தட்டி நின்ற கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது!
தரை தட்டி நின்ற கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது!
தரை தட்டி நின்ற கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் தரைதட்டி நின்ற பிரதிபா காவேரி கப்பல், இழுவை கப்பல் மூலம்  நேற்று நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

சென்னையில் நீலம் புயல் காரணமாக கடந்த மாதம் 31 ம் தேதி பெசன்ட்நகரில் எண்ணெய் கப்பல் பிரதிபா காவேரி என்ற எண்ணெய் கப்பல் கரை ஒதுங்கி தரை தட்டியது. அன்று இரவு காற்று பலமாக வீசியதால் அந்த கப்பல் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு இழுத்து வரப்பட்டு சுமார் 6 மீட்டர் ஆழத்திற்கு கடற்கரை மணலில் புதைந்து நின்றது.

தரை தட்டி நின்ற கப்பலை மீட்டு நடுக்கடலுக்குள் கொண்டு செல்ல கப்பல் நிறுவனத்தினரும்,பொறியாளர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மால்வியா என்ற இழுவை கப்பல் கயிறு மூலம் எண்ணெய் கப்பலை இழுக்கும் பணியில் ஈடுபட்டது.மீட்பு கப்பலின் இழுவைப் பணியால் நேற்று முன்தினம் பிரதிபா காவேரி கப்பலின் முன்பகுதி சற்று அசைக்கப்பட்டதுடன், தெற்கு - வடக்கு என்ற திசையிலிருந்து தென்கிழக்கு நோக்கி கப்பல் சற்று திரும்பியது. இதற்கிடையில் கப்பலில் பழுதான என்ஜின், நங்கூரம், சுக்கான் மற்றும் புரபெல்லர் ஆகியவற்றை நெதர்லாந்து, சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள பொறியாளர்கள் சரி செய்தனர். இருளில் மூழ்கிக்கிடந்த கப்பலில் ஜெனரேட்டர்கள் பொறுத்தப்பட்டு இரவு விளக்குகள் போடப்பட்டன.

நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது

##~~##
மால்வியா கப்பல் தன்னுடைய இழுவை பணியை வழக்கம் போல் நேற்று காலை 8.15 மணிக்கு  மீண்டும் தொடங்கியது.சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரத்னா என்ற இழுவை கப்பலும் நேற்று காலை 11.20 மணிக்கு சென்னை பட்டினப்பாக்கம் வந்தது.
மால்வியா கப்பல் கயிறு மூலம் பிரதீபா காவேரி கப்பலை இழுத்தது.வேகமாக இழுத்ததால் எண்ணெய் கப்பல் கொஞ்சம் கொஞ்மாக நகர்ந்து சென்றது.நேற்று மாலை 6.20 மணியளவில் பிரதீபா காவேரி கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.அப்போது கடற்கரையில் பார்வையிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் கைதட்டி பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்பூ கொளுத்தியும் உற்சாகத்துடன் அந்த கப்பலை வழியனுப்பி வைத்தனர்.கப்பல் பொறியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜி.கே.வாசன் ஆய்வு
இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தனியாக ஒரு கப்பலில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணியிலிருந்து 6.30 மணிவரை அவர் பட்டினப்பாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்னை துறைமுகசபை தலைவர் அதுல்யமிஸ்ரா உட்பட அதிகாரிகளும் உடன் இருந்தனர். மாலையில் கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட போதும் ஜி.கே.வாசன் அங்கு இருந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இறந்தவர்களுக்கு இழப்பீடு
கப்பல் விபத்தில் பலியான 6 ஊழியர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இழுப்பீடு கிடைக்கும் வகையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். கடந்த 12 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் ஒத்துழைப்பு நல்கிய மீனவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"என்றார்.