Published:Updated:

`பத்மாவதி' படத்தின் பெயர் மாறுகிறது! `யுஏ' சான்றிதழ் தர தணிக்கை வாரியம் முடிவு

பிரதீப்.த.ரே
`பத்மாவதி' படத்தின் பெயர் மாறுகிறது! `யுஏ' சான்றிதழ் தர தணிக்கை வாரியம் முடிவு
`பத்மாவதி' படத்தின் பெயர் மாறுகிறது! `யுஏ' சான்றிதழ் தர தணிக்கை வாரியம் முடிவு

சர்ச்சையில் சிக்கிய பத்மாவதி படத்துக்கு `யுஏ' சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் முடிவு செய்துள்ளது. 


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பத்மாவதியாகத் தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 

படப்பிடிப்பு தொடங்கியது முதலே ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திர சமூக மக்கள் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு படத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தியது. படத்தில் நடித்த தீபிகா படுகோனே, படத்தின் இயக்குநருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பத்மாவதி திரைப்படம் நாடு முழுவதும் விவாதப் பொருளானது. எதிர்ப்பைத் தொடர்ந்து, படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.”

இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்தை மீண்டும் பார்த்த மத்திய தணிக்கை அதிகாரிகள் படத்துக்கு `யுஏ' சான்று வழங்க முடிவு செய்துள்ளனர். படத்தில் சில காட்சிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், படத்தின் பெயரை 'பத்மாவத்' என்று மாற்றுமாறும் படக்குழுவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதைப் படக்குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த மாற்றங்களைச் செய்த பிறகு படத்துக்கு `யுஏ' சான்றளிக்கப்படும். ஆக, விரைவில் பத்மாவதி திரைப்படம் பெயர் மாற்றத்துடன் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.