Published:Updated:

ஆயிரம் பண்டிகைகளுடன் மொபைல் 'ஆப்'! சுற்றுலாப் பயணிகளைக் கவர கேரள அரசு ஏற்பாடு

ஆயிரம் பண்டிகைகளுடன் மொபைல் 'ஆப்'! சுற்றுலாப் பயணிகளைக் கவர கேரள அரசு ஏற்பாடு
ஆயிரம் பண்டிகைகளுடன் மொபைல் 'ஆப்'! சுற்றுலாப் பயணிகளைக் கவர கேரள அரசு ஏற்பாடு

ஆயிரம் பண்டிகைகளுடன் மொபைல் 'ஆப்'! சுற்றுலாப் பயணிகளைக் கவர கேரள அரசு ஏற்பாடு

கேரள  மாநில சுற்றுலாத்துறை தங்கள் மாநிலத்துக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், மாநிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டிகைகளை வரிசைப்படுத்தி புதிய மொபைல் ‘ஆப்’ (செயலி) ஒன்றை தயாரித்துள்ளது. ரூ.28 லட்சம் செலவில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தின் அமைப்பு, மக்கள் தொகை, கொண்டாடப்படும் விழாக்கள், பண்டிகைகள், பாரம்பர்யம், பழக்கவழக்கம், உணவுகள், வழிகாட்டி, பண்டிகைகள் கொண்டாடப்படும் நேரம், விழாவின் பூர்வீகம், அதன் பெருமை, அதுதொடர்பான தகவல்களுக்கு அந்த மாவட்டத்தில் யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்பன போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 


இந்தச் செயலியைப் பயன்படுத்தி சுற்றுலாப்பயணிகள் தங்களின் பயணத்தையும் திட்டமிடலாம். எந்த நகரத்தில் இருந்து எங்கு செல்வது, ஒரு நகரத்துக்கும், மற்றொரு நகரத்துக்கும் இடையே உள்ள தொலைவு ஆகியவற்றை கணக்கிட்டு சுற்றுலாவை திட்டமிடலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோயில்கள், படகுப்போட்டி நடக்கும் இடங்கள், பாரம்பர்ய நடனங்கள், இசை விழாக்கள், கலை, விளையாட்டுகள் எங்கு நடக்கும் என்பதையும் இந்தச் செயலி மூலம் அறிய முடியும்.

காசர்கோடு மாவட்டத்தில் 82 பண்டிகைகளும், கண்ணூர் மாவட்டத்தில் 85 பண்டிகைகளும், வயநாடு மாவட்டத்தில் 44 பண்டிகைகளும், கோழிக்கோடு மாவட்டத்தில் 61 பண்டிகைகளும், பாலக்காடு மாவட்டத்தில் 54 பண்டிகைகளும், திருச்சூரில் 88 பண்டிகைகளும், எர்ணாகுளத்தில் 85 பண்டிகைகளும், இடுக்கியில் 68 பண்டிகைகளும், கோட்டயத்தில் 102 பண்டிகைகளும், ஆழப்புழாவில் 82 பண்டிகைகளும், பத்தனம்திட்டாவில் 55 பண்டிகைகளும், கொல்லத்தில் 53 பண்டிகைகளும், அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 104 பண்டிகைகளும் இடம்பெற்றுள்ளன. 

கேரள மாநிலத்துக்கே உரிய பாரம்பர்ய தோல் பொம்மலாட்டம், ஓணம் மலபார் ஆற்றுத் திருவிழா, ஓச்சிர களி, அனந்தபுரி சக்க மகோத்ஸவம், மலபார் சர்வதேச பட்டம் விடும் திருவிழா பற்றியத்தகவல்களும் அந்தச் செயலில் உள்ளன. கேரளாவுக்குச் சுற்றுலா செல்பவர்களுக்கு இந்தச் செயலி உபயோகமாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு