Published:Updated:

கசாப் தூக்கில் போடப்பட்டது கண்டிக்கத்தக்கது: பழநெடுமாறன்

கசாப் தூக்கில் போடப்பட்டது கண்டிக்கத்தக்கது: பழநெடுமாறன்
கசாப் தூக்கில் போடப்பட்டது கண்டிக்கத்தக்கது: பழநெடுமாறன்
கசாப் தூக்கில் போடப்பட்டது கண்டிக்கத்தக்கது: பழநெடுமாறன்

சென்னை: மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டது  கண்டிக்கத்தக்கது என்றும்,கசாப்பை சிறையில் வைத்து சீர்திருத்தியிருக்க வேண்டும்  என்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,"ஐ.நா. தனது உறுப்பு நாடுகளுக்கு மரண  தண்டனை கூடாது என்று தீர்மானம் கொண்டு வர உள்ள இந்த நேரத்தில், கசாப்புக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உயிரை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.அவசர அவசரமாக கசாப்பை  தூக்கில் போட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது மனித நேயத்துக்கு எதிரான  செயல்.

##~~##
காந்தி பிறந்த நம் நாட்டில் மரண தண்டனையை இன்னும் வைத்திருப்பது அவமான  செயல். மும்பை குண்டு வெடிப்பு மிக கொடூரமானது.நூற்றுக்கணக்கானோர்  கொல்லப்பட்ட இந்த செயலை கண்டிக்கிறேன்.அதில் தொடர்புடைய குற்றவாளியை  சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர மரண தண்டனை விதிக்க கூடாது.
மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கப்பட உள்ளது.இந்தியா பிற நாடுகளுக்கு  வழிகாட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.மரண தண்டனையை மனித நேயம்  உள்ளவர்கள் யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்” என்றார்.