Published:Updated:

திருவாவடுதுறை ஆதீனம் காலமானார்!

திருவாவடுதுறை ஆதீனம்  காலமானார்!
திருவாவடுதுறை ஆதீனம் காலமானார்!
திருவாவடுதுறை ஆதீனம்  காலமானார்!

நாகப்பட்டினம்: திருவாவடுதுறை ஆதீனம் சிவபிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்  (62) இன்று அதிகாலை 2 மணியளவில் மரணம் அடைந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மற்றும்  கும்பகோணம் ஆகிய இடங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சிவபிரகாச தேசிக  பரமாச்சாரியார்,இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.

கடந்த 1981-ம் ஆண்டு மடத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றார்.83-ம் ஆண்டு  முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்பதவி  வகித்து வந்தார்.

இவர் மடத்தின் சார்பில் சைவசித்தாந்த பயிற்சி மையத்தை ஆரம்பித்து சிங்கப்பூர்  மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் சைவ மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

##~~##
மடத்தி்ன் கீழ் செயல்பட்டு வரும் 20 பெரிய ‌கோவில்கள் மற்றும் 50 சிறிய  ‌கோவில்களை நிர்வகித்து வந்தார்.இவர் 550க்கும் மேற்பட்ட நூல்களை  வெளியிட்டுள்ளார்.