Published:Updated:

வீரபாண்டி ஆறுமுகம் மறைவு: சேலத்தில் கடைகள் அடைப்பு!

சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் இன்று காலை  மரணமடைந்த நிலையில்,சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

வீரபாண்டி ஆறுமுகம் மறைவு குறித்த தகவலை அறிந்ததும் திமுக தொண்டர்கள் மற்ரும்  கட்சி நிவாகிகள்,சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள திமுக மாவட்ட  அலுவலகத்துக்கு தொண்டர்கள் திரண்டு வந்தனர்.

அவர்கள்,அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் படத்திற்கு மலரஞலி  செலுத்தினர்.

இந்நிலையில் சேலம் புதிய ஸ்டாண்ட் உள்ளிட்ட மாநகரில் அனைத்துப் பகுதிகளிலும்  உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு சென்று தங்கள் குழந்தைகளை வீடுகளுக்கு  அழைத்துச் சென்றனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் வீடு  திரும்பினர்.