Published:Updated:

தர்மபுரி வன்முறை: மாயாவதி வருகை

தர்மபுரி வன்முறை: மாயாவதி வருகை
தர்மபுரி வன்முறை: மாயாவதி வருகை
தர்மபுரி வன்முறை: மாயாவதி வருகை

தர்மபுரி: தர்மபுரியில் வன்முறை நடந்த கிராமத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்  மாயாவதி, வருகிற 26 ம் தேதி வருகிறார்

தர்மபுரியில் நடந்த காதல் கலப்பு திருமணம் தொடர்பாக அங்குள்ள நத்தம் காலனியில்  உள்ள வீடுகள் சேதப்படுத்தப்பட்டு பணம், பொருட்கள் சூறையாடப்பட்டன.பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான விவரங்களை தமிழக பகுஜன் சமாஜ்  நிர்வாகிகளிடம் இருந்து அக்கட்சி தலைவர் மாயாவதி கேட்டறிந்தார்.

வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கக்கோரியும், தாக்குதலில்  தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக  நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

##~~##
அத்துடன் தர்மபுரி வன்முறை நடந்த கிராமத்திற்கு வருகிற 26-ம் தேதி மாயாவதி  வருகிறார். அவரது தலைமையில் அன்று தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டமும்  நடைபெற உள்ளதாக அக்கட்சியினர் தெரிவி்த்துள்ளனர்.
இந்நிலையில் தர்மபுரி வன்முறை நடந்த கிராமத்திற்கு வந்த அம்பேத்கரின் பேரன்  பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே,அங்கு சேதமடைந்த வீடுகளை  பார்வையிட்டு,பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.