Published:Updated:

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மீண்டும் பழுது!

விகடன் விமர்சனக்குழு
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மீண்டும் பழுது!
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மீண்டும் பழுது!
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மீண்டும் பழுது!

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 5-வது யூனிட்டில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளதால்,210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன.5 யூனிட்டுகளில் இருந்தும் தினமும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 5 யூனிட்டுகளும் மிகவும் பழையதாகிவிட்டதால் அவற்றில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது.

கடந்த 6 மாதங்களாக 5 யூனிட்டுகளிலும் மாறி மாறி பழுதும், தீ விபத்தும் நிகழ்கிறது. இதனால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

##~~##
இந்நிலையில் இன்று காலை அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட் கொதி கலனில் பழுது ஏற்பட்டது.இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. அனல்மின்நிலைய என்ஜினீயர்கள் பழுதை சரிசெய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.