Published:Updated:

மின்வெட்டு நேரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

மின்வெட்டு நேரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்
மின்வெட்டு நேரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

மின்வெட்டு நேரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

மின்வெட்டு நேரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்

சென்னை: சென்னையில் வெளியிடுவது போன்று மின்வெட்டு காலநிர்ணயம் குறித்த அறிவிப்பு முறையாக அனைத்து மாவட்ட மக்களுக்கும் தெரிவிக்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் மின்நிலைமை குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி.ரவிச்சந்திரன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுவது, மின்விநியோக நேரத்தில் குறைந்த அழுத்த மின்சாரம், மின்விநியோகத்துக்கு தேவைப்படும் உள்கட்ட அமைப்பு வசதியின்மை போன்ற பிரச்னைகளால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் எத்தனை மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது? மின்வெட்டு நேரம் பற்றிய தகவலை டிவி மற்றும் பிற ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காதது ஏன்? ஆகியவற்றுக்கு விளக்கமான பதில் மனுவை தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இதுதொடர்பான மின்சார வாரிய அதிகாரிகளுக்கான அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடந்தது. முதன்மை செயலாளர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நீதிமன்றம் கேட்ட விளக்கங்களை, வழக்கு விசாரணைக்கு வரும் போது முறையாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவதுடன், மின்சார உற்பத்தியை அதிகரித்து மின்வெட்டை குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஊடகங்களில் அறிவிப்பு

##~~##
இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் தெளிவாக மின்வெட்டு நேரம் தெரிவிக்கப்படுவது போன்று பிறமாவட்டங்களிலும் மின்சார விநியோக நேரம் மற்றும் மின்வெட்டு நேரம் குறித்து தெளிவாக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 3 ம் தேதிக்கு வருகிறது.அங்கு பதில் மனு தாக்கல் செய்த பின்னர், முறையாக சென்னையில் மின்வெட்டு நேரம் அறிவிக்கப்படுவது போன்று, பிறமாவட்டங்களிலும் மின்வெட்டு நேரம் கணக்கிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் மின்வெட்டு நேரம் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
அடுத்த கட்டுரைக்கு