Published:Updated:

புதிய காற்றழுத்தத் தாழ்வு: டிச.3 முதல் மழை பெய்ய வாய்ப்பு!

புதிய காற்றழுத்தத் தாழ்வு: டிச.3 முதல் மழை பெய்ய வாய்ப்பு!
புதிய காற்றழுத்தத் தாழ்வு: டிச.3 முதல் மழை பெய்ய வாய்ப்பு!
புதிய காற்றழுத்தத் தாழ்வு: டிச.3 முதல் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி  உள்ளதாகவும்,வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,"
வங்க கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக உருவாகி உள்ளது.  இது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

##~~##
இதன் காரணமாக டிசம்பர் 3 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்  மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடலோர மற்றும் வட மாவட்டங்களில் மிக கன மழை  பெய்யும்”என்றார்.