Published:Updated:

`பத்மாவத்' படத்துக்கு எதிராகத் தொடரும் போராட்டம்..! திரையரங்குகளில் தீ வைப்பு

`பத்மாவத்' படத்துக்கு எதிராகத் தொடரும் போராட்டம்..! திரையரங்குகளில் தீ வைப்பு
`பத்மாவத்' படத்துக்கு எதிராகத் தொடரும் போராட்டம்..! திரையரங்குகளில் தீ வைப்பு

'பத்மாவத்' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வன்முறையாளர்கள் குஜராத் மாநிலத்திலுள்ள தியேட்டர்களிலுள்ள வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.

`பத்மாவத்' படத்துக்கு எதிராகத் தொடரும் போராட்டம்..! திரையரங்குகளில் தீ வைப்பு

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம், 'பத்மாவத்'. இந்தப் படத்தில், பத்மாவதியாக தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திர சமூக மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

`பத்மாவத்' படத்துக்கு எதிராகத் தொடரும் போராட்டம்..! திரையரங்குகளில் தீ வைப்பு

 இதையடுத்து, படத்தின் பெயர் மாற்றப்பட்டு சில காட்சிகளும் நீக்கப்பட்டன. படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, நாளை ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில், படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றுவருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 'பத்மாவத்' படம் திரையிடப்படவிருந்த திரையரங்குகள்மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். திரையரங்கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

`பத்மாவத்' படத்துக்கு எதிராகத் தொடரும் போராட்டம்..! திரையரங்குகளில் தீ வைப்பு

அதேபோல, டெல்லியிலும் 'பத்மாவத்' படத்துக்கு எதிராகக் கடுமையான போராட்டம் நடைபெற்றுவருகிறது. போராட்டக்காரர்கள் சாலையிலுள்ள தடுப்புகளைத் தீவைத்துக் கொளுத்தினர். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் படம் வெளியாக உள்ள திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.