Published:Updated:

எதிர்க்கட்சி எம்.பி.க்களை மிருகங்களுடன் ஒப்பிட்ட மணி சங்கர் அய்யர்!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்துகொள்ளும்விதம்,  கிணற்றுக்குள்ளிருந்து கூக்குரலிடும் மிருகங்களைப்போல் உள்ளது என்று காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி  உள்ளது.

ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மணி சங்கர் அய்யரிடம் அன்னிய  முதலீடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமளி குறித்து கேட்கப்பட்டது.

##~~##
அதற்கு பதிலளித்த அவர்,"ஒருவருடைய கருத்தை தெரிவிக்க நாகரீகமான மற்றும்  மரியாதைக்குரிய வழிமுறைகள் உள்ளன.ஆனால் எதிர்கட்சிகள் எம்.பி.க்கள்  நடந்துகொள்ளும் விதத்தை பார்க்கும்போது,கிணற்றுக்குள்ளிருந்து கூக்குரலிடும்  மிருகங்களைப்போல் உள்ளது” என்று கூறினார்.
மணி சங்கர் அய்யரின் இந்த விமர்சனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.