Published:Updated:

5 ஏக்கர் நிலத்துக்கு வெறும் ரூ.4 லட்சம் இழப்பீடு! - அலைகழிக்கப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயி

மகாராஷ்டிரா தலைமைச் செயலகம் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற விவசாயி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

5 ஏக்கர் நிலத்துக்கு வெறும் ரூ.4 லட்சம் இழப்பீடு! - அலைகழிக்கப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயி

தர்மா படேல்
 
வடமகாராஷ்டிராவைச் சேர்ந்த முதியவர் தர்மா படேலுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை அனல்மின் நிலையம் அமைப்பதற்காக அம்மாநில அரசு வாங்கிக் கொண்டது. 5 ஏக்கர் நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தர்மா படேல் தன் நிலத்துக்கு தகுந்த இழப்பீட்டை வழங்குமாறு கடந்த மூன்று மாதங்களாக மாநில நிர்வாக தலைமையகத்துக்கு பலதடவை சென்று மனு அளித்துள்ளார். ஆனால், மாநில அரசு படேலின் மனுவைக் கண்டுக்கொள்ளவில்லை.

இதனால் மனமுடைந்த படேல் கடந்த 22-ம் தேதி மகாராஷ்டிரா தலைமைச் செயலகம் முன்பு அபாயகரமான ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் மும்பை ஜெ.ஜெ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தர்மா படேல் உயிரிழந்ததையடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு அவரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தொகை கொடுத்துள்ளனர். ஆனால், அரசு கொடுத்த தொகையை அவரின் குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து தர்மா படேலின் மகன் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் ‘ ‘எங்கள் நிலத்தில் 600 மாங்காய் மரங்களும், 700 சீன பேரிச்சம் மரங்களும் இருந்தன. எங்கள் நிலத்தை அரசு எடுத்து கொண்டது. இப்போது எங்களுக்கென்று விவசாய நிலம் இல்லை.  என் தந்தை, அரசு எடுத்துக்கொண்ட எங்கள் நிலத்துக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகையைக் கேட்டு பலதடவை அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்தார். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது என் தந்தை இறந்துவிட்டார். அவரின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை அவரின் உடலை வாங்கமாட்டோம்’ என்றார்.  மகாராஷ்டிராவில் தற்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு