Published:Updated:

``பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதமாக இருக்கும்!’’ - பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

``பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதமாக இருக்கும்!’’ - பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
``பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதமாக இருக்கும்!’’ - பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் 2018-19-ம் நிதியாண்டில் 7 முதல் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர், கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அரசின் பொருளாதார வளர்ச்சிக்கான செயல்பாடுகள்குறித்த பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் தாக்கல் செய்தார். 

அதில், கடந்த ஓராண்டில் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளின் பயனாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தி கடந்தாண்டைவிட அதிகரித்து 6.75 சதவிகிதத்தை எட்டியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2018-19 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார். குடியரசுத் தலைவர் உரை மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்செய்த பின்னர், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.