Published:Updated:

டி.டி.வி தினகரனின் புதிய கட்சிக்கு 3 பெயர்கள்!- டெல்லி உயர் நீதிமன்றத்தில் பரிந்துரை

நமது நிருபர்
டி.டி.வி தினகரனின் புதிய கட்சிக்கு 3 பெயர்கள்!- டெல்லி உயர் நீதிமன்றத்தில் பரிந்துரை
டி.டி.வி தினகரனின் புதிய கட்சிக்கு 3 பெயர்கள்!- டெல்லி உயர் நீதிமன்றத்தில் பரிந்துரை

ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற டி.டி.வி தினகரன் குக்கர் சின்னத்தை தனது அணிக்கு வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.


உள்ளாட்சி தேர்தல்களில் சின்னம் ஒதுக்குவது மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவு என்றும், தனி நபராக தேர்தலில் போட்டி இடுபவருக்கு குக்கர் சின்னம் அளிக்கலாம். ஆனால், ஒரே அணியாக உள்ளவர்களுக்கு அளிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இதற்குப் பதில் கூறியிருந்தது.  இதனைத் தொடர்ந்து, புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் டி.டி.வி தினகரன் இறங்கியுள்ளார். புதிய கட்சிக்கு அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று பெயர்களை தேர்ந்தெடுத்து நீதிமன்றத்தில் இன்று தினகரன் தரப்பினர் சமர்ப்பித்துள்ளனர். ஆகவே, தினகரன் விரைவில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும், புதிய கட்சியை உடனே பதிவு செய்வது சாத்தியமில்லாத ஒன்று. அதனால், தேர்தல் ஆணையம் இதற்கு இடைக்கால ஏற்பாடு செய்துதர வேண்டும் என தினகரன் தரப்பில் ஆஜரான கபில் சிபில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

-சுகன்யா