Published:Updated:

காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு ஆதரவான கருத்து! - கர்நாடகாவில் ரஜினி உருவபொம்பை எரிப்பு

காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு ஆதரவான கருத்து! - கர்நாடகாவில் ரஜினி உருவபொம்பை எரிப்பு
காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு ஆதரவான கருத்து! - கர்நாடகாவில் ரஜினி உருவபொம்பை எரிப்பு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்தார். இதைக் கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.


 தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னையில், உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில் காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு 192 டி.எம்.சி-யிலிருந்து 177.25 டி.எம்.சி-யாகக் குறைக்கப்பட்டது. இது தொடர்பாகத் தமிழக அரசியல் தலைவர்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். 

அரசியலுக்கு வர ஆயத்தமாகி வரும் நடிகர் ரஜினிகாந்த்தும் அது தொடர்பான தன் கருத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “காவிரி நீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழகத்துக்கு ஆதரவானக் கருத்தைக் கூறியிருந்தார். 


 

நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவில் பிறந்தவர். அவர் காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவானக் கருத்தைத் தெரிவித்தது, கன்னட அமைப்புகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அந்த அமைப்புகள் எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கின்றன. கர்நாடக மாநிலம் சன்னப்பட்னா நகரில் கன்னட ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரஜினியின் உருவபொம்மையைக் கொளுத்தி போராட்டம் நடத்தினார்கள். ரஜினிக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.