Published:Updated:

``வங்கி மோசடியில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு இருக்கிறது!’’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சுகன்யா பழனிச்சாமி
``வங்கி மோசடியில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு இருக்கிறது!’’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
``வங்கி மோசடியில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு இருக்கிறது!’’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

நாட்டையே அதிர வைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி ஊழலில், காங்கிரஸ் தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். 

``வங்கி மோசடியில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு இருக்கிறது!’’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பான ஆவணங்களைச் செய்தியாளர் சந்திப்பின்போது சமர்பித்த நிர்மலா சீதாராமன், இந்த மோசடியில், காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்க்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் நிரோவ் மோடி மற்றும் அவரின் மாமா மெஹுல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான கீதாஞ்சலி நகைக்கடைக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் வாடகைக்கு விட்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். மேலும், 2013 செப்டம்பர் 13 அன்று ராகுல் காந்தி, கீதாஞ்சலி நகைக்கடை குழுவின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில்11,000 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இம்மோசடியில், பிரபல தொழில் அதிபரும் வைர வியாபாரியுமான நிரோவ் மோடிக்கு தொடர்பிருப்பதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி சி.பி.ஐ-யிடம் ஜனவரி 29-ம் தேதி அன்று புகார் அளித்தது. 

நிரோவ் மோடி, அவர் குடும்பத்தினர் மற்றும் மோசடிக்கு உதவிய பஞ்சாப் வங்கி அதிகாரிமீது கடந்த ஜனவரி 31-ம் தேதி அன்று சி.பி.ஐ, வழக்குப்பதிவு செய்து. இதனிடையில், வைர வியாபாரி நிரோவ் மோடி மற்றும் அவரின் மாமா மெஹுல் சோகிசி ஆகியோருடன் மூத்த காங்கிரஸ் தலைவருக்கு `இணைப்பு' உள்ளதாகப் பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நிரோவ் மோடி, விஜைய் மல்லையா, லலித் மோடி போன்று அவரின் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பி சென்றுவிட்டனர் என்ற தகவலும் வெளியாகிவருகிறது.