Published:Updated:

ஆபரேஷன் தியேட்டரில் திடீர் மின்தடை! - மொபைல் டார்ச் வெளிச்சத்தில் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

பிரதீப்.த.ரே
ஆபரேஷன் தியேட்டரில் திடீர் மின்தடை! - மொபைல் டார்ச் வெளிச்சத்தில் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
ஆபரேஷன் தியேட்டரில் திடீர் மின்தடை! - மொபைல் டார்ச் வெளிச்சத்தில் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

ஆந்திர மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவருக்கு அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்த சமயத்தில் திடீனெ மின்தடை ஏற்பட்டதால், மருத்துவர்கள் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவைசிகிச்சை செய்த சம்பவம் நடந்துள்ளது.

ஆபரேஷன் தியேட்டரில் திடீர் மின்தடை! - மொபைல் டார்ச் வெளிச்சத்தில் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்


அந்த அரசு மருத்துமனையில் மொத்தம் 10 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டது. அந்தத் தியேட்டரில் மின் தடை ஏற்பட்டாலும், வெளிச்சத்தைக் கொடுக்கும் 4 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால், அவற்றில் ஒன்று தான் இப்போது செயல்படும் நிலையில் உள்ளது. இதுபற்றி மருத்துவர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், அதை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மருத்துவர்கள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாகிவிட்டது. புதன்கிழமை இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

அந்த எல்.இ.டி விளக்குகளை மாற்ற ரூ.5 லட்சம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள் எதுவும் இல்லை. ஆனால், அந்த மருத்துவமனையில் ரூ.65 கோடியில் தாய் மற்றும் சேய் நலப்பிரிவு அமைக்க ஆந்திர அரசு ஆணை பிறப்பித்துள்ளது. செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, “மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் மூலம் தடையை நீக்கும் வசதி மருத்துவமனையில் இருக்கிறது. ஆனால், ஜெனரேட்டரை ஆன் செய்து மின்சாரத்தைக் கொண்டுவர 5 நிமிடங்கள் வரை காலதாமதம் ஆகும். இந்தக் காலதாமதத்தைத் தவிர்க்கவே மருத்துவர்கள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அறுவைசிகிச்சையைத் தொடர்ந்துள்ளனர்” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

குண்டூர் அரசு மருத்துமனையில்தான் ஆந்திராவிலேயே முதல் இதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் கமினேனி ஸ்ரீனிவாஸுக்கு இந்த மருத்துவமனையில்தான் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.