Published:Updated:

அரசு அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகர்! பதறிப்போன ஊழியர்கள்

மலையரசு
அரசு அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகர்! பதறிப்போன ஊழியர்கள்
அரசு அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகர்! பதறிப்போன ஊழியர்கள்

கர்நாடகாவில், ஆளும் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த நபர் ஒருவர், அரசு அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி அலுவலர்களை மிரட்டும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவின் கிருஷ்ணராஜபுரம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர், நாராயண்சாமி. நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற இவர், தான் கூறிய வேலைகளை அதிகாரிகள் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டினார். அப்போது, திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோலை அலுவலகத்தில் உள்ள பொருள்கள்மீது ஊற்றிய அவர், மாநகராட்சி அலுவலகத்துக்குத் தீ வைத்துவிடுவதாக மிரட்டினார். மேலும், தான் முதல்வர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கம் என்றும் கூறி அதிகாரிகளை மிரட்டினார். 

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவிவருகின்றன. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர், அரசு அதிகாரிகளை மிரட்டியுள்ள சம்பவம், கர்நாடகாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளதுடன், தேர்தல் நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது, முதல்வர் சித்தராமையாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இதேபோல காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரி என்பவரின் மகன் மதுபான விடுதியில் ஒருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது.