Published:Updated:

தூர்வாரும் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: ஜி.கே.வாசன்

தூர்வாரும் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: ஜி.கே.வாசன்
தூர்வாரும் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: ஜி.கே.வாசன்

சென்னை, Dec 22: கடல் அரிப்பை தடுப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் கடலை தூர்வாரும் கப்பலை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தூர்வாரும் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: ஜி.கே.வாசன்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் புதிதாக “டிசிஐ டிரெட்ஜ்– 19’’ என்ற கடலை தூர்வாரும் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது. எண்ணூர் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தலைமை தாங்கினார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் கப்பலில் உள்ள தூர்வாரும் கருவியை இயக்கி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

##~~##

கடற்கரை பகுதியில் அரிப்பை தடுப்பதற்காக கப்பல் போக்குவரத்து துறை சார்பில் ஹாலந்து நாட்டிலிருந்து ரூ.528 கோடி மதிப்பில் தலா 3 தூர்வாரும் கப்பல் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் முதல் தூர்வாரும் கப்பல் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மீதம் உள்ள இரண்டு கப்பல்கள் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் வரஉள்ளன. இவை அனைத்தும் வந்தவுடன் இந்தியத் துறைமுகங்களின் 80 சதவீதம் அகழ்வுப் பணிகளைச் செய்து முடிக்கும் திறன் கொண்டவையாக விளங்கும். தற்போது வந்துள்ள கப்பல் எண்ணூர் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கடல்அரிப்பை தடுப்பதற்காக, கடலில் இருந்து மணலை அள்ளி அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் கொட்டி கடல் அரிப்பு தடுக்கும் பணியில் இந்த கப்பல் ஈடுபடுத்தப்படுகிறது.

தகவல் சேகரிப்பு உட்பட பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தூர்வாரும் கப்பல் 25 மீட்டர் ஆழம் வரை தூர்வாரும் திறன் கொண்டது. 14.9 நாட்டிகல் மைல் வேகமான அலைகளிலும் செயல்படும் திறன் கொண்டது. குறைந்த மின்சாரம் மற்றும் குறைந்த செலவினங்களில் செயல்படுத்த முடியும். ஆர்கானிக் மற்றும் எரிவாயு மண்ணிலும் தூர்வாரும் பணிகளைத் திறம்படச் செய்யும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ள முதல் கப்பல் இதுவாகும்.

மத்திய நிதித்துறை அமைச்சகம் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை மத்திய கப்பல் துறை அமைச்சகத்திற்கு வழங்கி உள்ளது. இதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாயில் எண்ணூர் துறைமுகம் மேம்படுத்தப்பட உள்ளது. ரூ.400 கோடி மதிப்பில் 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு துறைமுக வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.