Published:Updated:

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டை!

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டை!
கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டை!
கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டை!

சென்னை: கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டை  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.  கூட்டுக்குடும்பமாக இருந்தால் அந்த குடும்பத்தின் சார்பில் ஒரே ஒரு குடும்ப அட்டை  மட்டும் வழங்கப்படுகிறது.ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் வைத்து இருந்தால்  அதே போலி அட்டையாக கணக்கிட்டு அதிகாரிகள் ரத்து செய்து விடுவார்கள்.

வீட்டு முகவரி அத்தாட்சிக்கு பெரும்பாலன அலுவலகங்களில் ரேஷன் அட்டையைத்தான்  கேட்கிறார்கள்.அதனால் கூட்டு குடும்பமாக வசிப்பவர்கள் தனித் தனி குடும்ப அட்டை  பெற முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

##~~##
இந்நிலையில் கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் எந்த பொருளும்  வேண்டாம் என்ற பிரிவின்கீழ் தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த அட்டையை வாங்க ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும்.தொலைபேசி ரசீது  போன்ற ஏதாவது ஒரு அத்தாட்சி மட்டும் இருந்தால் போதும்.புதிய ரேஷன் அட்டை  வாங்கி கொள்ளலாம்.இந்த அட்டைகளை வாங்குவது எளிது.விண்ணப்பித்த ஒரு வாரம்  அல்லது 15 நாட்களுக்குள் இந்த வகை அட்டைகளை வழங்கப்படும் என்று உணவுத்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அட்டையை பயன்படுத்தி பொருட்கள் எதுவும் வாங்கமுடியாது.வீட்டு முகவரி  அத்தாட்சிக்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.இந்த அட்டையில் வீட்டு முகவரி,  குடும்பத்தலைவரின் புகைப்படம்,அவருடையை தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து  விபரங்களும் இடம் பெற்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.