Published:Updated:

`சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்

தினேஷ் ராமையா
`சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்
`சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்

சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் 10 பேருக்கு, ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து ஹைதராபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

`சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில போக்குவரத்துக் காவல்துறையினர் எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சிறுவர்கள் ஓட்டிவந்த வாகனங்களைப் பறிமுதல்செய்த போலீஸார், அவர்களது பெற்றோர்களை விசாரணைக்கு அழைத்தனர். சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்தாக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையுடன், மோட்டார் வாகனச் சட்ட விதி எண் 180-ன் கீழ் ரூ.500 அபராதமும் விதித்து ஹைதராபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, பெற்றோர்கள் 10 பேருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சிறைவாசம் அனுபவித்த பின்னர், சிறுவர்களை இருசக்கர வாகனங்களை இயக்க பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நம்புவதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவனை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.