Published:Updated:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு: அரசு தயக்கத்திற்கு காரணம் என்ன?

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு:  அரசு தயக்கத்திற்கு காரணம் என்ன?
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு: அரசு தயக்கத்திற்கு காரணம் என்ன?
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு:  அரசு தயக்கத்திற்கு காரணம் என்ன?

புதுடெல்லி: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு  காலதாமதப்படுத்தி வருவது ஏன் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

காவிரி நடுவர் மன்றம், கடந்த 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.16 ஆண்டுகளுக்கு  பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது இறுதி தீர்ப்பை அது  வெளியிட்டது.

காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிட்ட நடுவர் மன்றம்,அதில்  தமிழ்நாட்டின் பங்காக 419 டி.எம்.சி. நீர் அளிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில்  கூறியிருந்தது.

இந்த தீர்ப்பு அரசிதழில் வெளியானால்தான், அடுத்த 90 நாட்களுக்குள் தீர்ப்பு அமலுக்கு  வரும் என்பது சட்டம்.

ஆனால், தீர்ப்பு வெளியாகி 6 ஆண்டுகள் ஆன பிறகும், இன்னும் அது அரசிதழில்  வெளியிடப்படவில்லை.

##~~##
இந்நிலையில் கடந்த மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு  கூட்டத்தில், நடுவர் மன்ற தீர்ப்பை டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை  எடுக்கப்படும் என்று அதன் தலைவரான நீர்வள அமைச்சக செயலாளர் டி.வி.சிங்,   தெரிவித்திருந்தார்.மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் இது தொடர்பாக  பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு இன்னும் அரசிதழில் வெளியிடாமல்  உள்ளது.
இந்நிலையில் காவிரி பிரச்னை தொடர்பான சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகளில் முடிவு காணப்படும்வரை, அரசிதழில்  வெளியிடக்கூடாது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விஷயத்தில், மத்திய சட்ட அமைச்சகம் இறுதி முடிவு எடுக்க இயலாத  நிலை உள்ளதாகவும், நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படாததற்கு இதுவே  காரணம் என்றும் மத்திய அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெல்லி செய்திகள்  தெரிவிக்கின்றன.